மதியமாகியும் வீடு திரும்பாத ராதிகவின் கைபேசிக்கு அவரது உறவினர் அழைப்பு எடுத்தபோது மறுமுனையில் யாரும் பேசாமல் அமைதியாக இருந்ததனால் பதற்றமடைந்த உறவினர்கள் வைத்தியசாலை சென்று விசாரித்த போது, வைத்தியசாலை பதிவேட்டில் ராதிகா வந்ததற்கான எந்தவிதமான பதிவுகளும் இல்லை! இதனால் பயந்து போன உறவினர்கள் திரும்பத் திரும்ப அழைப்பெடுத்தபோது பதிலேதும் இல்லாமல் பிற்பகல் 3 மணியளவில் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது.
அவருக்கும் குழந்தைக்கும் என்ன நடந்ததிருக்கும் என உறவினர்கள் கவலையடைந்திருக்கும் நிலையில்.. அங்குள்ள சிலரது கருத்துக்களின் படி யாராவது கடத்தியிருக்கலாம் என்றே கருதுகிறார்கள்.
தாயும், குழந்தையும் வைத்தியசாலை சென்று காணமல் போய் இன்று வரையும் எதுவுமே தெரியாமல் இருப்பதானது அந்தப் பகுதியில் மிகவும் பதற்றத்தினை உருவாக்கியுள்ளது!
Geen opmerkingen:
Een reactie posten