கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட விஐயகுமாரி அவர்களையும் மகளினையும் விடுதலை செய்யுமாறும், மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா சபை நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்து பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
பிரெஞ்சு அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் வண்ணம் பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு முன்பாக நேற்று பி.பகல் 3.00 மணி முதல் 5.30 வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நுற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, நெதர்லாந்தில் டென்காக் என்னுமிடத்தில் பாராளுமன்றத்தின் முன்பாக இளையோர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து சிறிலங்கா அரசின் திட்டமிட்ட சதியால் இராணுவத்தின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கம் 13 வயதேயான சிறுமி விபூசிகா,அவரின் தாயார் ஜெயக்குமாரி மற்றும் கர்ப்பிணித்தாய் ஆகியோரை விடுவிக்க நவடிக்கை எடுக்கக் கோரியும்,
தமிழ் மக்கள்மேல் சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட மனிதஉரிமை மீறல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் மக்களின் தார்மீக உரிமைக்கு வழிவகுக்கக் கோரியும் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இப் போராட்டத்தில் நெதர்லாந்துக் கட்சிகளில் ஒன்றானள S P கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய கெங் வன் கெர்வன் (Henk van Gerven)அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
மேலும், நோர்வே ஒஸ்லோவில் அமைந்திருக்கும் வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காகவும் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டமானது சிறீலங்கா அரசின் சதித்திட்டத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கும் திருமதி ஜெயக்குமாரி மற்றும் சிறுவர் இல்லம் எனும் போர்வையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரியின் மகளான சிறுமி விபூசிகா மற்றும் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தியும் இவர்களின் விடுதலைக்கு நோர்வே அரசு காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு, நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு, நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நோர்வே மக்களவை ஆகிய அமைப்புக்களால் நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்காக கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மனித உரிமை மீறலை செய்து கொண்டருக்கும் சிறீலங்கா பேரினவாத அரசானது. தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன ஒழிப்பை மூடிமறைக்க அதன் சாட்சிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதோடு தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம் என கனவுகண்டுள்ள கோத்தபாய இப்படியான மிலேச்சத்தனமான மனிதஉரிமை மீறல்களை செய்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தாயகத்தில் எமது உறவுகளின் குரல்கள் சிறீலங்காவின் அகோரக்கரங்களால் நெரித்தாலும் தமிழகத்திலும் புலத்திலும் தமிழ்மக்களின் விடுதலைக்காக குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRULWnv7.html
Geen opmerkingen:
Een reactie posten