தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 maart 2014

புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 12:29.47 AM GMT ]
விடுதலைப் புலிகள் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த 2008 யூன் மாதம்  சர்வதேச பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
பின்னர், 2011 ல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால், இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும், அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதற்கான வழக்கு விசாரணை 27-02-2014  மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.
புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை
[ சனிக்கிழமை, 01 மார்ச் 2014, 01:30.04 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த தடையை நீக்கும் வகையில் ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது,
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதனை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இணையச் செய்திகளில் மட்டுமே தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விக்டர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் குற்றச் செயல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தகவல்களை வழங்கிய போதிலும் அதனை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது
இதன்படி, புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten