இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம் ஆரம்பம்.
இலங்கைத் தீவில் 1948 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் நடைபெற்று வந்தாலும் 2008ஆம், 2009 ஆம் ஆண்டுகளில் பாரியளவில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டு, தமிழர்களின் நிலங்கள், வளங்கள், மற்றும் சொத்துக்கள் என்பன இலங்கை அரசாலும், அரச படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையிலும் சர்வதேசமும், சர்வதேசங்களுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆக்கபூர்வமான எந்த செயற்பாடும் இன்றி இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழர்களுக்கான நீதியைக் கோரும் மனித நேய நடைபயணமாக இந்த நடைபயணம் அமைந்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmryCRVNXgw2.html
நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக கூடிய மக்கள் மத்தியில் தனது நடைபயணம் தொடர்பாக தமிழ் இளைஞர் சத்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
தனது இந்த திடீர் முடிவும், குறுகிய கால நடைபயணமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தினாலும் இந்த கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அவசியமாவதால் அதனை இவ்வாண்டு யாரும் செய்யாத நிலையிலேயே தான் நடக்க தீர்மானித்ததாகவும் சொன்னார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் தனது இந்த தனிப்பட்ட செயற்பாட்டிற்கு மக்களினதும், மக்கள் அமைப்புக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தரும் உற்சாகமே தன்னை இந்த குறுகிய கால எல்லைக்குள் ஐ.நா வரை கொண்டு செல்லும் என்றும் தனது உறுதிக்கும், தனது நடைபயணம் வெற்றிகரமாக குறித்த தினத்தில் நிறைவுபெற மாவீரர்களதும், போரில் கொல்லப்பட்ட மக்களது தியாகங்களும் தனக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
அத்தோடு தான் 4 கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணத்தை மேற்கொள்வதாகவும் அக் கோரிக்கைகளையும் மக்கள் முன் எடுத்து விளக்கி அகவணக்கம் செலுத்தி பின் அங்கு குழுமியிருந்த மக்களிடம் கை கொடுத்து விடைபெற்று தனது நடைபயணத்தை சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பித்தார்.
அந்த நான்கு கோரிக்கைகளும்:
1. இலங்கைத் தீவில் பாரியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் சர்வதேச சுயாதீன விசாரணை ஐ.நா வால் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
2. 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை காண சர்வதேசத்தின் மேற்பார்வையில் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்.
3. கைது, துன்புறுத்தல், கற்பழிப்பு, கொலை என இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழும் தமிழர்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஆவன செய்யவேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு தமிழ் மக்கள் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த ஐக்கிய நாடுகள் சபை ஆவன செய்யவேண்டும்.
Walk for Justice from London: Geneva |
[ Thursday, 21 February 2013, 02:40.19 PM GMT +05:30 ] |
Walk for justice campaign from London- Geneva on demanding to grant justice for Lankan Tamils vastly affected from the genocide attacks carried out by the Sinhala Buddhist regime commenced at London yesterday. |
Since 1948 Lankan Tamils face various genocide attacks in their motherland. However Tamils were severely attacked from brutal genocide attacks carried out against them in the year 2008 and 2009. Tamil’s have lost their relatives lands and properties in the country. During the time of walks it’s stressed United Nation to stop land grabbing carried out by the Lankan government and military personals in the Tamil areas. Walk for justice campaign commenced in front of British prime minister’s office at 2.30 pm on Wednesday afternoon. Tamil youth named Sathi brief about the purpose of his campaign. Addressing gathering he noted many people were surprised over this short term walk campaign. He urge the support from people’s movement and people to achieve success in this campaign. He also proposed four demands such as, 1. Initiate an independent international investigation into the systematic genocide of Tamils by successive Sinhala governments in the island of Sri Lanka. 2. Remove the Sinhala military from the Tamil people’s homeland, encompassing the north and east of the island of Sri Lanka, and facilitate a return to normalcy for the local population. 3. Conduct a UN sponsored referendum to determine the political aspirations of Tamils in their homeland as well as amongst the Diaspora. 4. Ensure Sri Lanka offers a general amnesty to political prisoners and releases them without delay. |
Geen opmerkingen:
Een reactie posten