தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

Jayalalith​aa cancels Asian Athletic Games over Sri Lanka’s participat​ion!!


இலங்கை வீரர்கள் பங்கேற்றால் ஆசிய தடகள போட்டியை தமிழகத்தில் நடத்த விடமாட்டேன்: ஜெயலலிதா
சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால், தமிழர்களின் மனம் புண்படும் என்பதால் தமிழகத்தில் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், 20வது ஆசிய தடகள போட்டிகளை சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்த சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளிய கோர காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப் படுகொலை நடந்து இருப்பது தெரிய வருகிறது.
இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும்.
இலங்கை வீரர்கள் 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரில் உள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் எழுதப்பட்டது. அதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த பதிலும், தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை.
ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள 20வது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்படாது.
இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Jayalalith​aa cancels Asian Athletic Games over Sri Lanka’s participat​ion
[ Thursday, 21 February 2013, 08:46.10 AM GMT +05:30 ]
Tamil Nadu will not host the Asian Athletics Games scheduled for July, Chief Minister Jayalalithaa said, because the Centre has not asked Sri Lanka to skip the event.
She cited the alleged war crimes by Sri Lankan defence forces as they defeated the rebel LTTE in 2009, ending the island’s lengthy civil war.
“Sri Lanka’s participation would hurt people’s sentiments in Tamil Nadu,” she said, adding that the Union government has ignored a request by her to ban Sri Lanka from the Games.
The 20th edition of the Games was to be hosted in India after a gap of nearly 20 years. New Delhi had hosted the Games in 1989.
Yesterday, the chief minister described as “a war crime”the alleged execution of the 12-year- old son of LTTE chief V Prabhakaran.
Photos released by UK’s Channel 4 show the child snacking while in military custody just hours before he was shot dead. The photos, which are morphed according to the Sri Lanka administration, feature in a new documentary that will screen next month in Geneva to coincide with a UN Human Rights Council discussion on the country, currently facing censure by the US over its failure to probe war crimes.
The DMK, a senior ally in the Prime Minister’s ruling coalition, has said that India must vote against Sri Lanka and support the resolution.
Last year, after the party threatened to quit the government, India voted against Sri Lanka as the UN’s top human rights body asked the island to look into allegedly vast human rights violations as the defence forces defeated the rebel Tigers.
Rights groups say up to 40,000 civilians were killed by security forces.
The Sri Lankan government has denied causing civilian deaths and has maintained that LTTE chief Prabhakaran’s family were killed in fighting. The bodies of his wife and daughter have not been found.

http://eng.lankasri.com/view.php?224Old0acJ5YOd4e3KMM302cAmB3ddeZBmS202eWAA2e4oY5naca3lOA42

Geen opmerkingen:

Een reactie posten