அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிவரும் படகுகள் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உயர்நிலை அதிகாரியே பொறுப்பு என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளதாக தெ ஒஸ்ரேலியன் செய்திதாள் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அவுஸ்திரேலிய இலங்கை சென்றிருந்த அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பொப் கார் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியதன் பின்னரே தமது நாட்டுக்கு வரும் படகு அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அதிகாரியை இனங்கண்டுள்ளனர்.
இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் உயர் பதவியை கொண்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதிக்கு நெருக்கமானவரும் ஆவர்.
இந்தநிலையில் இவரே கடந்த 10 மாதங்களில் அவுஸ்திரேலியாவுக்கு அதிகமான அகதிப் படகுகள் வருவதற்கு காரணம் என்று அந்த நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என்று தெ ஒஸ்திரேலியன் தெரிவித்துள்ளது.
இது அவுஸ்திரேலியாவின் சட்டவிரோத அகதிக்கொள்கைக்கு எதிரான செயல் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவுஸ்திரேலியாவின் இந்த சந்தேகத்தை அந்த நாட்டுக்கான இலங்கை தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர மறுத்துள்ளார்.
இது முழுமையான பிழையான மற்றும் நம்பமுடியாது சோடிக்கப்பட்ட தகவல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்தும் நடவடிக்கையின் பின்னணியில் உயர் அதிகாரி
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்தும் நடவடிக்கையின் பின்னணியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் இயங்கி வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த உயர் அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.
குறித்த நபர் ஜூலியா கில்லார்ட் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten