ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமையாளரின் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். ஆனால், விசேட அறிக்கையாளர்களை அனுப்புவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதியொன்று இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிலுக்கு போர் முடிந்த பின் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களை நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்து நேரடியாக காணவேண்டுமென வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தி வருகின்றது.
ஆரம்பத்தில் இவ்வாறுதான் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலில் நவநீதம்பிள்ளையின் அலுவலக அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்து சகல பங்குதாரர்களுடனும் பேசினர்.
நவநீதம்பிள்ளையின் விஜயத்துக்கான தளமிடுவதற்காகவே அவர்கள் வந்தனர்.
நாம் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். இங்கு வருவதற்கு உடன்பட முடியாது என வெளிவிகார அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் நவநீதம்பிள்ளை இலங்கையை கடுமையான விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா மீதான குற்ற பிரேரணையில் கைக்கொள்ளப்பட்ட செயன்முறையை கடுமையான விமர்சித்த அவர் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் குறித்து மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வில் நவநீதம்பிள்ளை ஓர் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
மேலும் முன்னைய தீர்மானத்துக்கு வலுவூட்டும் வகையில் அடுத்த அமர்வில் இலங்கைமீது இன்னுமொரு தீர்மானத்தை தாம் கொண்டுவர உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
ஐநா பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் பிரதி இலங்கைக்கு அனுப்பி வைப்பு?
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 11:40.02 PM GMT ]
இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெஸனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையை இலங்கை அரசு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதன் பிரதியொன்று இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten