தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 februari 2013

கனடாவின் அச்சுறுத்தலை நிராகரித்த இலங்கை !


மனித உரிமைகள் தொடர்பில் கனடா விடுத்துள்ள அச்சுறுத்தலை இலங்கை நிராகரித்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கை தமது சொந்த மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற விடயத்தில் தெளிவான கொள்கையை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை, ஏனைய நாடுகளை காட்டிலும் மனித உரிமைகள் விடயத்தில் பொதுமக்கள் தொடர்பான பொறுப்பை உணர்ந்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் உரிய கவனத்தை செலுத்தாவிட்டால், புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு அது வழிவகுக்கும் என்று கனடா அண்மையில் எச்சரித்திருந்தது.
கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இலங்கையில் தாம் பயணம் மேற்கொண்டிருந்த போது அரசியல் நிலைமைகள் பாரிய பின்னடைவாக உள்ளமையை கண்டதாக கென்னி குறிப்பிட்டிருந்தார்.
இந்த எச்சரிக்கை தொடர்;பிலேயே வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமனுகம தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten