தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 februari 2013

அமெரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சி திட்டத்துக்கு சந்திரிகாவின் அரசாங்கம் உதவியதாக குற்றச்சாட்டு !


2003ம் ஆண்டு அமெரிக்காவின் சித்திரவதை நிகழச்சி திட்டத்துக்கு உதவியதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கை மையமாக கொண்ட மனித உரிமைகள் நிறுவனம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
இதன்படி இலங்கை உட்பட்ட 54 நாடுகள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பிரிவினரின் ரகசிய தடுப்பு முகாம்களை அல்லது போக்குவரத்து அல்லது சித்திரவதைகளுக்கு உதவியதாக மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு அது, அமரிக்க புலனாய்வுபிரிவினரின் நடவடிக்கைகளுக்காக விமானத்தள வசதிகளை செய்துக்கொடுத்திருந்தது.
2001ம் ஆண்டு அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னரே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை உதவியதாக மனித உரிமைகள் நிறுவனம் குற்றம் சுமத்;தியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten