தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 februari 2013

நல்லிணக்கத்தை சர்வதேச மயப்படுத்தக் கூடாது: பாலித கொஹன


நல்லிணக்கத்தை சர்வதேச மயப்படுத்தக் கூடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
போரின் பின்னரான நல்லிணக்க முயற்சிகளை சர்வதேச மயப்படுத்த முடியாது. நல்லிணக்கப் பணிகள் காத்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த நேரமும், அவகாசமும் அவசியப்படுகின்றது. போர் காரணமாக ஏற்பட்ட காயங்களை உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகளின் மூலம் ஆற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
உள்நாட்டு ரீதியான பொறிமுறைமை ஒன்றின் மூலம் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படும். போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற மற்றும் அதற்கு பிந்தைய காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், மிகவும் சொற்பளவிலான முறைப்பாடுகளே படையினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
ஆயுத முரண்பாடுகளில் சிவிலியன் பாதுகாப்பு என்ற தொனிப் பொருளில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten