ஈகைப் பேரொளி முருகதாஸ் அவர்களின் 4 ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியா Harrow நகரில் ஆரம்பமாகிய நீதி கேட்டு ஐநாவை நோக்கிச் செல்லும் "தமிழ் வான்" இரண்டு நாட்களை கடந்து இன்று அதிகாலை 1:30 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்திருன்கின்றது.
கடந்த இரண்டு நாட்களாக Harrow , London நகரங்களில் " தமிழ் வான்" நடமாடும் கண்காட்சி ஊடாக ஈழத்தமிழர்களின் மீது சிங்கள இனவெறி அரசு முன்னெடுக்கும் இனவழிப்பை பிரித்தானியா மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஆரம்பித்திருந்தது.
சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கும் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி வைக்கப்பட்டு , காணொளி ஊடாக தமிழ் இன அழிப்பு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது.
"தமிழ் வான்" னின் நடமாடும் கண்காட்சியை பார்வையிட்ட மக்கள் , கண்ணீர் வடித்து தமது ஆதரவை தெரிவித்தது இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்திருந்ததாக குறிப்பிடிருந்தார்.
மூன்றாவது நாளான 14.2.2013 அன்று "தமிழ் வான்" பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற முன்றலில் சென்றடைய உள்ளது . அங்கு பிரான்ஸ் தமிழர் பேரவை கவனயீர்ப்பு நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளார்கள்.
அத்துடன் அங்கு கண்காட்சி வைக்கப்பட்டு பிரான்ஸ் மொழியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது . அத்தோடு அரசியல் பிரமுவர்களுடனான சந்திப்புகளும் நடைபெற உள்ளது.
பிரான்ஸ் பாராளுமன்றம் முன் 14/02/2013 அன்று நீதி கேட்டு ஒன்றுகூடுவோம்.
எதிர்வரும் நாட்களில் தமிழ் வான் Holland ,Belgium ,Luxemburg ,Germany , Austria , Italy , Swiss , நாடுகளை ஊடறுத்து ஜெனீவா ஐநாவை சென்றடைய உள்ளது.
இறுதி நாளான 4.03.2013 அன்று மாபெரும் மக்கள் போராட்டம் ஐநா வளாகத்தில் ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றது.
ஐ.நா வில் நடைபெறவிருக்கும் மனித உரிமை சார்ந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கலந்துகொள்ளும் இவ்வேளை தமிழீழ மக்களாகிய நாம் ஒருங்கிணைந்து உலக அரங்கின் மனச்சாட்சிகளை உலுக்கும் வகையில் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்.
சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 65ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது.
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா?
இன்று மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடந்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும்.
நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம்.
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் .
நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது.
நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது.
புலத்தில் பிரித்தானியாவில் இருந்து அன்று சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் பல்வேறு தமிழின உணர்வாளர்களின் பல்வேறு போராட்டங்களை கடந்து இன்று மீண்டும் சிவந்தன் அவர்களின் "தமிழ் வான்" னின் நடமாடும் தமிழ் இன அழிப்பின் கண்காட்சி போராட்டம் ஐநாவை நோக்கிச் செல்கின்றது.
இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 22 வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்தே ஐநாவை நோக்கி தமிழ் வான் பயணிக்கின்றது.
நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.
நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும்.
இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து)
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Geen opmerkingen:
Een reactie posten