தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 februari 2013

தேசிய மொழிக் கொள்கையை பொலிஸார் மீறியுள்ளனர்!- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார !


இலங்கையின் பொலிஸார், தேசிய மொழிக் கொள்கையை மீறியுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்
கொழும்புக்குள் வரும் வாகனங்களை கணக்கெடுப்பது தொடர்பில் தற்போது பொலிஸார், படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
எனினும் அதில் சிங்கள மொழியிலேயே விடயங்கள் தரப்பட்டுள்ளன.
இது முழுமையாக மனித உரிமை மீறல் சம்பவமாகும்.
இலங்கையின் பொலிஸ்மா அதிபர் தேசிய மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செயற்படுகிறார்.
எனினும் இந்த விடயம் அவருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten