அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் எந்த ஒரு அகதிகள் படகையும் அகதிக் கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பை நடத்தாமல் தடுப்பதற்காக இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்து கொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அகதிகள் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் நிழல் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வரும் படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்துமாறு இலங்கையின் கடற்படையினரின் உதவிப்பெற்றுக்கொள்ளப்படும்.
அத்துடன் குறித்த அகதிப்படகுகள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது அவுஸ்திரேலிய சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையாது என்று மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அகதிகள் சாசனம், மேலதிக எல்லைகள் அதிகாரத்தை கொண்டிக்கவில்லை என்றும் மொரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், தமது அறிக்கையில்,
அகதிக் கோரிக்கையுடன் வரும் எந்த ஒரு ஆளையும் கடலில் வைத்து எவ்வித காரணங்களையும் கருத்திற் கொள்ளாமல், திருப்பியனுப்புவது, சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறுவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மூப்பட்ட எந்த ஒரு முயற்சியும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவே அமையும் என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அகதி சட்டத்தின்படி,அவுஸ்திரேலியா, தமது கடற்பரப்புக்கு வரும் எந்த ஒரு படகையும் அகதி கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பு இன்றி திருப்பியனுப்பமுடியாது என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை Macquarie பல்கலைக்கழக சட்டக்கல்லூரியின் பீடாதிபதி, Natalie Klein தமது கருத்தில், தமது கடற்பரப்புக்கு அப்பால் நின்று கப்பல்களை திருப்பியனுப்புவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அவுஸ்திரேலிய கரையில் இருந்து 24 கடல்மைல்களுக்கு அப்பால் என்ற தூரத்தை இது குறிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten