தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 februari 2013

ஐநா மனித உரிமைகள் பேரவையில் 9 நாடுகளின் ஆதரவே இலங்கைக்கு கிடைக்கும்!- வசந்த பண்டார !!


ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 9 நாடுகள் மட்டும் தமது எதிர்ப்பை வெளியிடும் நிலைமை உருவாகியுள்ளதால் நாம் பாரிய சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அரசாங்கம் பிளவுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமக்கெதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்'டு வரவுள்ளது. அதனை இந்தியாவும் ஆதரிக்கவுள்ளது.
இவ்வாறானதோர் நிலையில் எமக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உட்பட 9 நாடுகளே வாக்களிக்கும். எனவே இக்கூட்டத்தில் நாம் பாரிய சவால்களைச் சந்திக்க நேரிடும்.
பெரும்பாலான உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவுமே வாக்களிக்கும்.
இதன் பின்னர் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் உள்ளக விசாரணைகளை நம்ப முடியாதென்றும், அங்கு நீதித்துறை சுயாதீனம் இல்லையென்றும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கியமை ஜனநாயக விரோதச் செயலென்ற வாதத்தை அமெரிக்கா முன்வைக்கும்.
இவ்வாறானதோர் நிலை உருவாகும் போது இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக எவ்வாறு வியூகம் அமைப்பது என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணைக்குழுவின் அதிகாரமிக்க உத்தியோகத்தர் குழு நியமிக்கப்படும்.
இக்குழுவின் அறிக்கை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தருணத்தில் எமக்கெதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அவசியம் என அறிக்கை சம்ர்ப்பிக்கும்.
இவ்வாறு பாரிய நெருக்கடிகளை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் தற்போதுள்ள 13வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுமானால் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்படும்.
எவ்வாறெனினும் 13வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும்.
அச்சந்தர்ப்பத்தில் மத்திய அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும் வண்ணமும், வடக்கு, கிழக்கு மீள இணைய முடியாத ரீதியில் திருத்தங்களை மேற்கொண்டு 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten