நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இலங்கையின் 65 வது சுதந்திர தினமாகும். இலங்கையில் அது கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், புலம்பெயர் நாடுகளில் அது துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு அமைவாக கனடா நாட்டில் இளையோர்கள் அதனை துக்க தினமாக அனுஷ்டித்தார்கள். இதனைத் தொடர்ந்து நேற்றுமாலை பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர்களும், இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்துள்ள்தோடு, இலங்கை தேசிய கொடியை நெருப்பிட்டு தமது எதிப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். சிங்கள கொடியே தமிழர்களின் கொடியும் என பொய் பரப்புரை செய்து வருகின்றது சிங்கள பயங்கரவாத அரசு.
தமிழர்களுக்கு ஆரஞ்சு நிறத்தையும் முஸ்லிம் மக்களுக்கு பச்சை நிறத்தையும் கொடியில் கொடுத்திருக்கின்றோம் என பரப்புரை செய்யும் சிங்கள பயங்கரவாத அரசு அந்த இரண்டு நிறங்களை நோக்கியபடி எச்சரிக்கும் முகமாக வாள் ஒன்றை காட்டியபடி சிங்கம் ஒன்று நிற்பது போல் வடிவமைத்துள்ளது. ஆனால் தமிழர்கள் நாம் அக்கொடியை ஏற்கவில்லை என பல முறை நிரூபித்திருக்கின்றார்கள். அதை மீண்டும் நிரூபிக்கும் முகமாக சிங்கள பயங்கரவாத அரசின் கொடியை ஏற்றியவாரே தீயிட்டுள்ளார்கள் தமிழர்கள்.
இன அழிப்பின் 65 வது ஆண்டு ஆர்ப்பாட்டம் - பிரித்தானியா !
05 February, 2013 by admin
Geen opmerkingen:
Een reactie posten