தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 februari 2013

கிழக்கில் இன்னும் 3 ஆயிரம் பேருக்கு விலங்கு! கருணா பிள்ளையானுமா?


கிழக்கில் இன்னும் 3 ஆயிரம் பேருக்கு விலங்கு! கருணா பிள்ளையானுமா?

கிழக்கில் முன்னர் விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெறது இருந்து வருகின்ற முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 3 ஆயிரம் பேரை கடந்த இருவாரங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற் கொண்டு வந்துள்ளதாகவும் அதில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டுசென்று விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதூக புலனாய்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ் நடவடிக்கை தேசிய பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் மூவாயிரம் முன்னாள் விடுதலைப்புலிகள் கடந்த காலங்ளில் விடுதலைப் புலிகளில் இருந்து விலகி தமது குடும்பங்களுடனும் மற்றும் திருமணம் முடித்து குடும்ப வாழ்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மற்றும் வெளிநாடு சென்று திரும்பியுள்ளனர்.
இவர்கள் தொடர்பான விசாரணைகள் எதுவும் இன்றி இருந்துள்ளதாகவும் இவர்கள் புனர்வாழ்வு பெறாத நிலையில் இவர்கள் தொடர்பான விசாரணைகள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இந்த விசாரணைகளில் சிலரை 4ம் மாடிக்கு கொண்டுசென்று விசாரிக்க வேண்டிய தேவை காரணமாக கொண்டு சென்று விசாரிக்கப்பட்டுள்ளதுடன் இவ் விசாரணையின் பின்னர் புனர்வாழ்வுக்கு அனுப்ப வேண்டியவர்களை அனுப்பி புனர்வாழ்வு அழிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாங்கேணி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளை சேர்ந் 3 பேரை கைது செய்து 4ம் மாடிக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனேகரன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten