இலங்கைத் தீவில் நடந்தேறிய தமிழினப்படுகொலை தொடர்பில் விரைவில் வெளிவரவிருக்கின்ற ‘நோ பயர் சோன்’ எனும் ஆவணத் திரைப்படம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இந்திய மத்திய அரச பிரதிநிதிகளின் மத்தியில் திரையிடப்பட இருக்கின்றது.
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஏலவே வெளியிட்டிருந்த இரண்டு ஆவணப் படங்களின் புதிய வடிவமாக ‘நோ பயர் சோன்’ எனும் திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கின்து.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணத்திரைப்படானது தொடங்கவிருக்கின்ற ஜெனீவா-ஐநா மனித உரிமைகள் சபையிலும் திரையிடப்படவுள்ளது.
போர்க் குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் இந்த ஆவணபடத்தின் நெறியாளாகேலம் மெக்கரே அவர்கள் தெரிவித்துள்ளார்.
சனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
http://asrilanka.com/2013/02/18/14747
Geen opmerkingen:
Een reactie posten