தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

மே 19 இல் தான் பாலனை படுகொலை செய்தார்கள்! தடய ஆய்வில் புதிய தகவல்!!


தோற்கடிக்கப்பட்ட சமாதானம்: முன்னாள் ஜனாதிபதி கவலை!


போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சமாதானம் தோல்வியடைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
மக்கள் கட்சியின் தலைவர் விஜயகுமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மக்கள் கட்சியின் கொள்கைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்ண கருத்து வெளியிட்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைய சூழ்நிலைகளின் அடிப்படையில் கருத்து வெளியிடுவோருக்கு நாளை என்னவாகும் என்று தெரியாது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் துன்புறுத்தப்பட்டுள்ளேன். ஊடகங்கள் அது குறித்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் நான் அழுத்தங்கள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதில்லை.
அனைத்து மக்களும், அனைத்து நிலைமைகளும் மாற்றமடையும் என்ற கௌதம புத்தரின் கோட்பாட்டை நான் நம்புகின்றேன். என்றார்.


தமிழகத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்திய பாலச்சந்திரனின் பரிதாப பார்வையும் கொலையும்!


கே.சஞ்சயன்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன.
வரும் திங்கட்கிழமை – 25ஆம் திகதி – தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது.
இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே, இம்முறை நெருக்கடி அதிகமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால், அப்போது எதிர்பார்க்கப்பட்டதை விட, பன்மடங்கு அதிகமான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் சுமந்து கொள்ளும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த ஓர் ஆண்டு இடைவெளிக்குள் இலங்கை அரசாங்கம், நிறைவேற்றத் தவறிய பொறுப்புகளும் அதன் நடவடிக்கைகளும் தான்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்டவேயில்லை என்ற சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வது போன்றே, அண்மையில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் வெளியிட்ட கருத்து அமைந்திருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 வீதமான பரிந்துரைகள் மட்டும் தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று அவர், அந்தச் சந்திப்பில் ஒப்புக்கொண்டிருந்தார். இது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை நியாயப்படுத்துவதற்கு வாய்ப்பாகியது.
அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தமது பணியகம் அளிக்க முன்வந்த ஆலோசனை மற்றும் உதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளவில்லை என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜெனிவா கூட்டத்தொடருக்கு கடந்தவாரம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நிறைவேற்றவில்லை, அதற்கு உதவி அளிக்க ஐ.நா முன்வந்தபோது அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற நிலை – மிகப்பெரிய சிக்கலை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி விட்டது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இலங்கை அரசாங்கம் அலட்சியம் காட்டுகிறது, ஐ.நாவின் தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறது என்ற சர்வதேச கணிப்பு இதன் மூலம் உருவாகிவிட்டது.
இதற்கிடையில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அதற்காக கையாளப்பட்ட வழிமுறைகள் என்பன, இலங்கை அரசாங்கத்தினால் நீதித்துறை சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது என்று வெளியுலகம் தீர்மானிக்க காரணமாகி விட்டது.
அதுதவிர, திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று, அதிகாரப்பகிர்வை நிராகரிக்கும் வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து, இந்த அரசாங்கம், நிரந்தர அமைதிக்கோ, நல்லிணக்கத்துக்கோ வழிசெய்யும் அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாரில்லை என்றும் கருத வைத்துவிட்டது.
இப்படியே, ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறிய அரசாங்கத் தரப்பின் நடவடிக்கைகள், மற்றும் கருத்துகள், ஜெனிவா மீதான இறுக்கத்தை அதிகப்படுத்திவிட்டன.
இத்தகைய பின்னணியில், இப்போது புதிய பூகம்பமாக வெடித்திருப்பது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன் பற்றிய படங்கள்.
சனல் 4 தொலைக்காட்சியில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ என்ற தலைப்பில், இதுவரை இரண்டு ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்ட கல்லும் மக்கரே என்ற இயக்குநர், மூன்றாவதாக, ‘சூடு தவிர்ப்பு வலயம்‘ என்ற பெயரில் மற்றொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் திரையிடவுள்ள இந்த ஆவணப்படத்தில், இலங்கை அரச படைகளின் போர்க்குற்றங்கள், அதற்கான புதிய சாட்சியங்களை உள்ளடக்கியுள்ளதாக கல்லும் மக்கரே தெரிவித்துள்ளார்.
அவர் அவ்வாறு கூறியதுடன் நின்று விடாமல், இந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், புதிதாக மூன்று ஒளிப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவை மூன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றியவை.
லண்டலில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளிதழ், இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தி இந்து‘ ஆகியவற்றில் ஒரே நேரத்தில், இந்த ஒளிப்படங்களையும், அது பற்றிய கட்டுரைகளையும் கல்லும் மக்கரே வெளியிட்டது உலகெங்கும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே 19 இல் தான் பாலனை படுகொலை செய்தார்கள்! தடய ஆய்வில் புதிய தகவல்


தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten