இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 04:11.52 PM GMT ]
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது கோரிக்கையை வலியுறுத்தி தாம், மிச்செய்ல் ஒபாமாவுக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையின் வடக்குகி ழக்கில், சுமார் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் போரின் போது தமது கணவர்களை இழந்துள்ளனர்.
வறுமை, மற்றும் உதவிகள் இன்றி ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் உள்ளனர்.
இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
தமது பிள்ளைகளுக்கு உரிய கல்வி வசதிகளை செய்து கொடுப்பதில் தமிழ்ப் பெண்கள் சிரமங்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே அவர்களின் விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு நியாயம் தேடிக் கொடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரியுள்ளது.
அத்துடன், தமிழப்பெண்களிடம் உணவுக்காக காமத்தை கோரும் அளவுக்கு இலங்கைப் படையினர் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போரின்போது பெண்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டனர் என்று அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன், கடந்த காலத்தில் வெளியிட்ட அறிக்கையையும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten