இன்று 512 வது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
போருக்குப் பிந்திய காலத்தில் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. இதனால் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இராணுவத்தினர் பொதுமக்களுக்கு என்ன சேவையாற்றுகின்றார்கள் என்பதை அரச ஊழியர்களாகிய நீங்கள் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வடக்கில் இராணுவம் தேவையில்லை என்று பல்வேறு பல்வேறு தரப்பினர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்கள் ஐரோப்பா நாடுகளில் இருந்து வருகின்ற பணத்தினைப் பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
அத்துடன் தற்போது இங்குள்ள மதகுருமார்களும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இராணுவத்தினர் வடக்கில் அதிகமாக உள்ளனர்.
இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றே தெரிவிக்கின்றர். தற்போது இங்கு கடமையாற்றும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
இங்குள்ள காலசாரத்திற்கு மாற்றப்பட்டவர்களாக கடமையாற்றி வருகின்றனர் என்று அவர் குறிப்பட்டார்.
இந்த விளக்க கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
http://asrilanka.com/2013/01/19/13298
Geen opmerkingen:
Een reactie posten