சுய கௌரவத்துடன் கூடிய நீதியான ஓர் தீர்வுத் திட்டமொன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மக்களின் சம உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து அந்த சமூகத்தினருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும்.
தமிழ் மக்களுக்கு சுய கௌரவத்துடன் கூடிய நீதியான ஓர் தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அடித்தளமொன்று உருவாக்கப்படும் என கருதுவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் சந்தித்தபோதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten