உலகில் பாதுகாப்பு விடயத்தில் தெளிவாக பரிமாற்றங்கள் இல்லாத நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச ட்ரான்ஸ்பேரன்ஸி, இந்த தகவலை வெளியிட்டுள்ளது
முதல் தடவையாக உலகின் பாதுகாப்பு ஊழல்கள் மதிப்பீ;ட்டை சர்வதேச ட்ரான்ஸ்பேரன்ஸி வெளியிட்டுள்ளது.
88 நாடுகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தப்பட்டியலில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், டியூனிசியா போன்ற நாடுகளின் வரிசையில் இ குழுவில் உள்ளடக்கப்படடுள்ளது.
பட்டியலின்படி 70 வீதமான நாடுகள் கடுமையான பாதுகாப்புத்துறை ஊழல்களை மேற்கொள்கின்றன.
இதன்படி இலங்கையும் அந்த வகுதிக்குள் வருகிறது.
2009 ஆண்டு வரையிலான போர் வரையில் இலங்கையில் ஆயுதங்கள் தொடர்பான பண பரிமாற்றங்கள் தெளிவாக அமைந்திருக்கவில்லை.
நாடாளுமன்றம் மற்றும் ஏனைய திணைக்களங்களைக்கூட பாதுகாப்பு பிரிவு கட்;டுப்படுத்திய நிலையே காணப்பட்டது.
தனிப்பட்டவர்களின் ஊழல்கள், ஆட்சேர்ப்பில் அரசியல் கலப்பு போன்ற விடயங்களும் இலங்கையின் பாதுகாப்புத்துறையில் மலிந்திருந்தன.
பாதுகாப்புத்துறை கேள்விப்பத்திரங்கள் தொடர்பில் தெளிவுகள் இருக்கவில்லை.
அத்துடன் இலங்கையின் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது பாதுகாப்பு துறைக்கான கொடுப்பனவு விடயங்களில் தெளிவுகளை ஏற்படுத்தவில்லை என்று சர்வதேச ட்ரான்ஸ்பேரன்ஸி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 2011 ஆம் ஆண்டில் உலகநாடுகளின் பாதுகாப்பு செலவீனம் 1.6 ரில்லியன் டொலர்கள் என்று சர்வதேச ட்ரான்ஸ்பேரன்ஸி குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten