என்னடா அதிர்வு இணையம் பலரை குற்றஞ்சொல்கிறது என்று நினைக்கவேண்டாம். எமது தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வியியடையவும், 33 வருடப் போரட்டம் இவ்வாறு மெளனிக்கவும் இவர்கள் போன்றவர்களும் ஒரு மறைமுகக் காரணிகளாகவே இருக்கிறார்கள். 44,000 மாவீரர்களை நாம் இழந்தும் இன்றும் நாம் எமது போராட்டத்தை அ நாவில் இருந்து ஆரம்பித்துச் செல்லவேண்டி உள்ளது என்றால் அதற்கு காட்டிக்கொடுப்புகளும் கழுத்தறுப்புகளுமே காரணமாக அமைகின்றன என்பதனை எவராலும் மறுக்க முடியாது. களை எடுக்காது .... கள்வர்களையும் துரோகிகளையும் இனியும் நம்பிக்கொண்டு சென்றால்.... இன்னும் 20 வருடம் கழிந்தும் (2023)ல் கூட நாம் 2009 ம் ஆண்டு நிலையில் தான் இருப்போம் ! எனவே உண்மையாக எமது இனத்துக்காகப் போராட்க்கூடியவர்களை இனங்காணுவது நல்லது ! அதனால் தான் இதனை எழுதவேண்டிய சூழ் நிலை உண்டு அவசியம் உண்டு !
சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !
இந்தியாவின் முன் நாள் துணைப் பிரதம மந்திரியான எல்.கே அத்வானியின் மகள் லண்டனில், வசித்து வருகிறார். லேபர் கட்சியோடு மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் சென் கந்தையா 2009ம் ஆண்டு காலப் பகுதியில், அப்போதைய பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் வரை சென்று திரும்பும் பவரோடு இருந்தவர். இவர் லண்டனில் பல மருந்துப் பொருட்களை விற்க்கும், தொழிலோடு சம்பந்தப்பட்டவர். இவர் வேறு சிலருடன் இணைந்து புதிதாக ஒரு ரிரவல் ஏஜன்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது ஏர் இந்தியாவின் ரிக்கட்டை விற்கும், முதன்மை முகவர் தாம்... தான் என்ற தகுதியைப் பெற, எல்.கே அத்வானியின் மகளோடு பேரம் பேசியிருக்கிறார். லண்டனில் வசித்து வந்த எல்.கே அத்வானியின் மகள் அப்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த அஷோக் யாதவ்வை காட்ட, அவருடன் மில்லியலன் டாலர்கள் பெறுமதியான டீல் பேசப்பட்டுள்ளது. இதற்கு லஞ்சமாக முதலில் மூன்று லட்சத்தி எண்பது ஆயிரம்ன் பவுண்டுகளை இவர்கள் வழங்கியுள்ளார்கள்.
காசைப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர், இந்தியாவில் கொடுப்பார்களே பெரிய லட்டு...... அது ஒன்றை சென் கந்தையா கைகளில் கொடுத்துவிட்டார். காசை திருப்பிக் கேட்டு சென் கந்தையா குழுவினர் , பிரித்தானியாவில் வழக்கு தொடுத்துள்ளார்( ஆதாரம் இணைப்பு). ஆனால் எதிர் தரப்பினர் மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளார்கள். அதாவது ஏர் இந்திய விமானசேவையின் ரிக்கெட்டை தான் மட்டுமே பிரித்தானியாவில் விற்க்க முடியும், ஏனையவர்கள் தங்களிடம் தான் அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று பேரம் பேசி தான் இவர்கள் இந்தக் காசை தந்தார்கள் என்றும், இது ஒன்றும் எழுதப்பட்ட அக்ரீமென்ட் அல்ல என்று எதிர் தரப்பு கூறியுள்ளது. அப்படி என்றால் அதுக்கு நல்ல சொல் ஒன்று உள்ளதே..... லஞ்சம் ........ சாட் சாத் அதே தான். லஞ்சமாகத் தந்திருக்கிறார்கள் என்று எதிர் தரப்பு கூறிவிட்டது. பிரித்தானிய சட்டப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு அந்த ஒப்பந்தமூடாக பணம் பெறப்பட்டால் மட்டுமே , குறிப்பிட்ட பணத்தை நீதிமன்றம் சென்று திரும்பிப்பெறமுடியும்.
ஒருவருக்கு லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, நீங்கள் நீதிமன்றம் சென்று பணத்தை திருப்பி தரும்படி வழக்குபோட முடியாது. இது பிரித்தானிய சட்டப்படி பாரிய குற்றமும் ஆகும். எனவே சென் கந்தையாவின் குழுவால் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. (இதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளது). நீதிபதி தனது தீர்ப்பில், இது ஒரு சிவில் சட்டம் என்பதனால், நீதிபதி இதனை நிராகரித்துவிட்டார்.
இது ஒரு விக்கிரமாதித்தன் கதை என்று வைத்துக்கொண்டால் ..... வேதாளம் உங்களிடம் 5 கேள்விகளைக் கேட்கிறது. விக்கிரமாதித்தன் என்ன கூறியிருப்பார் ?
வேதாளம்: சென் சென் கந்தையா ஒரு வியாபாரி அவர் எதனை வேண்டும் என்றாலும் செய்யலாமே !
விக்கிரமாதித்தன்: அவர் வியாபாரியாக இருக்கலாம். ஆனால் தமிழர் நலனில் அக்கறைகொண்டவர் போல இருப்பது வெறும் நாடகமே. 2009ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போரை நிறுத்தச் சொல்லி லண்டன் மைய நகரத்தில் கூடியவேளை அவர்கள் தாம் வரச் சொன்னால் வருவார்கள் போகச் சொன்னால் போவர்கள் என்று லேபர் கட்சி எம்.பீக்களுக்கு இவர் படம் காட்டினார் ! அது குற்றம் ! தமிழர்களின் போராட்டத்தை வைத்து, லேபர் கட்சியில் பீலா காட்டி, அங்குள்ளவர்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுதி தனது பாக்கேட்டை நிரப்ப நினைப்பது, போராட்டத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் !
வேதாளம்: அப்படி என்றால் அவர் இந்தியா செல்லக்கூடாதா ராகுல் காந்தியை சந்திக்கக்கூடாதா ?
விக்கிரமாதித்தன்: ஏன் போகக் கூடாது பேஷாகப் போகலாம்.... யாரையும் சந்திக்கலாம். வியாபார நோக்கம் வியாபாரமாக இருக்கவேண்டும். தமிழர் பிரச்சனை தொடர்பாகச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, தனது வியாபார நோக்கத்தை கவனிப்பது மாபெரும் குற்றம் !
வேதாளம்: பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்தவேளை சென் கந்தையா அவர் காதில் சொன்ன விடையம் என்ன ?
விக்கிரமாதித்தன் பதில்: எனக்கு லேபர் கட்சியில் ரெம்பவும் பிரஷர் தர்றாங்கள். அதனால் எப்படி என்றாலும் விரைவா உண்ணாவிரதத்தை முடித்துவிடுங்கள் என்று....
வேதாளம்: அப்போது ஆட்சியில் இருந்த லேபர் கட்சி இவரை பகடைக்காயாகப் பாவிக்கவில்லையா ?
விக்கிரமாதித்தன் பதில்: அவர்கள் அரசியல்வாதிகள் அப்படி தான் இருப்பார்கள். ஆனால் நாம் யார் ? போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள். எமது இனத்தை எப்படி விட்டுக்கொடுக்க முடியும் ?
வேதாளம்: அப்ப விக்கிரமாதித்தா ..... சென் மற்றும் சுரேன் - சுகந்தனைப் பற்றி என்ன நினைக்கிறாய் ?
விக்கிரமாதித்தன் பதில்: அழிவின் விழிம்பில் இருக்கும் ஒரு இனத்தின் மீது நின்று கொண்டு அவர்களை ஒரு ஆட்டு மந்தைபோலப் பாவிப்பதும், தனது சுயநலத்திற்காகப் பாவிப்பதும் பெரும் குற்றமாகும். அதை விட அரசியலில் இருந்துகொண்டு லஞ்சம் கொடுப்பதும், தமிழர்களுக்காக பேசுகிறேன் என்று சொல்லி, நாடகம் ஆடுவதும் மன்னிக்க முடியாத ஒன்று. என்னைக் கேட்டால் அவர் பொது வாழ்வில் இருந்து விலகுவதே நல்லது. ஒரு வியாபாரியாக அவர் எதனையும் விற்கலாம். ஆனால் தமிழனை விற்க்கவேண்டாம் என்றார் விக்கிரமாதித்தன் !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்.
NEWS SOURCE : http://www.lawgazette.co.uk/news/high-court-ruling-reveals-lawyer-s-role-380000-aviation-bribe
http://judgmental.org.uk/judgments/EWHC-QB/2009/%5B2009%5D_EWHC_3218_(QB).html
Media Disclaimer
The views and news expressed on this page, do not necessarily represent athirvu.com. The athirvu.com cannot be held responsible for the accuracy of the news published on this page. This news was obtain from external parties, or it was published in another webpage.
Geen opmerkingen:
Een reactie posten