குறித்த தரவரிசை பட்டியலில் 179 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்படி உலகில் சிறப்பான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக பின்லாந்து இனங்காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வே, எஸ்தோனியா, நெதர்லான்ட், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
இதேவேளை, உலகில் மிகவும் மோசமான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக எதித்திரியா விளங்குகின்றது. இது 179 ஆவது இடத்தில் உள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2010 ஆம் ஆண்டு 178 நாடுகளைக் கொண்டு தயாரித்த பட்டியலில் இலங்கை 158 ஆவது இடத்தினையும், 2009 ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு தயாரித்திருந்த இவ்வாறான பட்டியலில் இலங்கை 51 ஆவது இடத்தினைப் பெற்று, ஊடக சுதந்திரத்தில் முன்னேறிய நாடாகக் கருததப்பட்டது.
எனினும் கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இலங்கையில் மிக மோசமாச முறையில் ஊடக சுதந்திரம் காணப்படுகின்றதை குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten