தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 januari 2013

திருமதி அடேல் பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிக்கை !!!


இலங்கை பேரினவாத அரசு, சர்வதேச அழுத்தங்கள், நெருக்கடிகளை சமாளிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பாரியார் அடேல் பாலசிங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. 
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், பெண் புலிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கடமையாற்றியதாகவும் தெரிவித்துள்ளது.
அடேல் பாலசிங்கம் இலங்கையில் 10 வயது சிறுமிகளுக்கு பயிற்சிகளை வழங்கியதாகவும், சிறுவர் போராளிகளின் கழுத்தில் சயனைட் வில்லைகளை மாட்டி விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
படையினரிடம் சிக்கினால் சயனைட் வில்லைகளை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேல் நாட்டு பெண் மற்றும் தாதி ஒருவர் இவ்வாறு கொடூரமான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில், ஆயிரக் கணக்கான இளம் சிறுமிகள் உயிரிழக்கக் காரணமாக யுத்தப் பயிற்சிகளை வழங்கிய அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவின் சர்ரே பிரதேசத்தில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பிரித்தானியா எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினர்கள் எவ்வாறு பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்த முடியும், அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக அண்மையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற போராட்டங்கள் சிங்கள பேரினவாதத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://news.lankasri.com/show-RUmryBTVNVhty.html

Lankan Defence Ministry blamed war crime allegations on Adele Balasingham
[ Tuesday, 01 January 2013, 02:47.08 AM GMT +05:30 ]
Human Rights Watch expressed its unequivocal view that suicide bombing is a crime against humanity. HRW also claims that the political elites, commanders, and those that organize, facilitate, and encourage these suicide attacks are likewise guilty of conduct that offends against prevailing norms of international criminal law.
Adele was responsible for training, arming and tying a vile of cyanide around the necks of these innocent children. Orders were simple - if captured commit suicide by taking the cyanide Defence ministry reports said.
Terrorists giving such orders is excusable but a Western woman and a nurse at that is nothing compared to her parents being proud of their daughter training child soldiers.
The UK authorities appear unconcerned about a war criminal living happily in Surrey after training thousands of young girls to their deaths. Of course, UK authorities have done little over the years to really clamp down on LTTE terrorism and one wonders why it would even allow its capital to be used as the international head quarters of the LTTE despite LTTE being banned in the UK.
Why ban an entity as a terrorist organization if UK allows it to hold demonstrations, collect funds, influence its politicians, have them speak on LTTE stages....strange in deed.
To view the report
http://eng.lankasri.com/view.php?2034Y5B220eYmBd34eaAmOl34cadQWAAcddcSAMQqdac4JlOmae42dBmY2e023B5Y402

Geen opmerkingen:

Een reactie posten