தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 januari 2013

யாழ். நகரில் வர்த்தக நிலையங்களின் விபரங்கள் திரட்டும் புலனாய்வு பிரிவினர்: பீதியில் வர்த்தகர்கள் !!


யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விபரங்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் திரட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில நாட்களாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு வர்த்தக நிலையங்களில் உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் பொலிஸ் புலனாய்வாளர்களும் இராணுவத்தனரும் மாறிமாறி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களில் வன்னியில் இருந்து வந்தவர்கள் யாராவது பணி புரிகின்றார்களா, தடுப்பில் இருந்தவர்கள் பணிபுரிகின்றார்களா என்ற விபரங்கள் குறிப்பாக திரட்டப்பட்டு வருகின்றது.
விபரங்கள் சேகரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் தற்போது பொலிஸராரும் இராணுவமும் வந்துள்ளளோம் இனிவரும் நாட்களில் கடற்படையும் வரும் என்று கூறிவிட்டு சென்றுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten