அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போரட்டங்களின் பின்னணியில் இரண்டு மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசு ஆதரவு சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை பயன்படுத்தி இந்த சக்திகள் அரசாங்கத்தை ஆட்சி கவிழ்க்க முயற்சிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதப் போராட்டத்திற்கு நிதி மற்றும் வேறும் வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளே இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
இரண்டு நாடுகளைச் சேர்ந்த தூதரகங்களும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்த தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு வழங்கி வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தி, அரசாங்கத்தை பதவியிழக்கச் செய்து, நாட்டை பிளவுபடுத்த குறித்த இரண்டு மேற்குலக நாடுகளும் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten