தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 januari 2013

பா.உ. சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று மீண்டும் சோதனை !!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின், அலுவலகம் இன்று மீண்டும் குற்றப்பிரிவுப் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணி தொடக்கம்  பிற்பகல் 1.30 மணிவரையான நான்கு மணித்தியாலங்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இச்சோதனையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினர்  அலுவலகத்தில் பாவனையிலிருந்த கணினியொன்றையும் எடுத்துச்சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
அத்துடன் அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திக்கச் சென்றிருந்த பொதுமக்களிடம் சிஐடியினர் விசாரணைகளை நடத்தியிருந்ததாக அறியவந்துள்ளது.
அதேவேளை கடந்த வாரம் குறித்த அலுவலகத்தில் சோதனை நடைபெற்ற வேளை பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பிலிருந்துள்ளார்.
அதனையடுத்து ஒருசில நாட்களின் பின்னர் அங்குசென்று அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தனது கடமைகளை கவனித்துக்கொண்டு இன்று மீண்டும் கொழும்புக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்.
அதன்  பின்னரே  இன்று மீண்டும் அவரது அலுவலகம் சிஐடி பொலிஸாரினால் சோதனைக்குள்ளாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten