தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 januari 2013

ஓசியன் லேடி கப்பலின் நான்கு தமிழர் மீதான மனித கடத்தல் குற்றச்சாட்டு ரத்து!!


ஓசியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்கு வந்தவர்களை அழைத்து வந்ததாக கூறப்பட்டு ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டை கனேடிய பிரிட்டிஸ் கொலம்பியா நீதிபதி ரத்துச்செய்துள்ளார். கனேடிய மனித கடத்தல் சட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய மனித கடத்தல் சட்டத்தை நீதிபதி மீறியுள்ளார் என்று சட்டத்தரணிகள் வாதிட்ட இரண்டு வாரங்களிலேயே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சம்பவங்களுக்கு மதிப்பளித்தல் என்ற விடயங்களை மையமாகக்கொண்டு இந்ததீர்மானத்தை எடுத்ததாக நீதிபதி மன்றில் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இந்த விசாரணை புதிய ஒரு விசாரணையாகவும் விசாரணையை நடத்துபவர் மற்றும் ஒரு நீதிபதி என்று தாம் கருதுவதாக நீதிபதி சில்வர்மென் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ராஜ் கந்தசாமி, பிரான்ஸிஸ், ஜெயசந்திரன் கனகராஜ், தேவராஜா ஆகிய மூவர் மீதே ஓசியன் லேடி கப்பல் மனித கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இவர்கள் தமது கப்பலில் 72 பேருடன் கனடாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten