இலங்கையின் அரசு மேற்குலகின் ஆலோசக, மற்றும் விளம்பர நிறுவனங்களினைப் பணிக்கு அமர்த்தியுள்ளதா என்று நோக்குமளவிற்கு அதன் ஆதரவுப் பத்திரிகைகள் செய்திகளை வெளியீட்டு வருகின்றன.
இலங்கை அரசின் ஆதரவு பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை முதற்பக்கத்தின் முக்கிய செய்தியாக கனடாவைத் தாக்கி “லங்கா கனடாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது… பாராதூரமான மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது.
அண்மையில் கனடாவில் பூர்வீகக் குடியினரால் நடத்தப்பட்ட போராட்டங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் கனடியப் பூர்வீக குடியினரின் சரத்துக்களை மதிக்காமல் செயற்படுதல், அவர்களது நிலங்களை அபகரித்தல் என இன்னோரன்ன செயற்பாடுகளை கனடாவில் குடியேறியோர் மேற்கொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய அரசு கனடாவின் பூர்வீகக் குடியினரின் விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
புதிய பாணியிலான இந்தத் ஊடகத் தாக்குதல் கனடாவை எந்தவிதத்திலும் அதன் இலங்கை குறித்த முடிவுகளில் இருந்து மாற வைக்கப் போவதில்லை.
இந்த ஆண்டு இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்தோ, எந்த மட்டத்தில் கலந்து கொள்வது என்பது குறித்தோ கனடிய அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லையென கனடிய அரசின் பிரதான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten