மேலும் 16 பேருக்கு நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இந்தநிலையில், சன் சீ கப்பலில் சென்றவர்களில் புகலிட கோரிக்கை அந்தஸ்து வழங்கப்பட்ட ஒருவரிமிருந்த அந்த உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.
குறித்த 26 வயது இலங்கையருக்கு புகலிட அந்தஸ்து வழங்கப்படுமானால் இந்த கப்பலுக்கு முன்னர் கனடாவுக்கு சென்ற ஒசியன் லேடி கப்பலின் 76 பேருக்கும் புகலிடம் வழங்க வேண்டி இருக்கும் என கனடா அரசாங்கம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை கருத்திற் கொண்டு கனேடிய அரசாங்கம் தமது உத்தரவை மீளப்பெற்றுள்ளது. இதற்கிடையில், ஒசியன் லேடி கப்பலில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ம் திகதி கனடாவுக்கு சென்ற 76 ஆண்களில் 15 பேர் அகதிகளாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளார்கள்.
15 பேரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் தமது கோரிக்கையை மீளப் பெற்றுள்ளார்.
அதேநேரம் மூன்று பேரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
http://www.canadamirror.com/canada/5241.html
Geen opmerkingen:
Een reactie posten