தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 januari 2013

இலங்கையில் குடியியல் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனை !


இலங்கையில் குடியியல் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய குடியியல் சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் சட்டத்திற்காக குரல் கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும்  அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது குறித்து அமெரிக்கத் தூதரகம் அவதானம் செலுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது பிரபஞ்சத்திற்கு உரித்துடையதென்பதுடன் அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை தாம் கோருவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

http://news.lankasri.com/show-RUmryBRWNWio0.html

Geen opmerkingen:

Een reactie posten