தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 januari 2013

இன்று பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற கடும் விவாதம் !


பிரித்தானிய பாராளுமன்ற கட்டத்தொகுதியில், இன்று கடுமையான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. என்னடா வழமையாக நடப்பது தானே இதில் என்ன ஸ்பெஷல் இருக்கு என்று எண்ணிவிடவேண்டாம். இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பாராளுமன்ற விவாதத்தில் பல எம்.பீக்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். குரொய்டன் எம்.பி ஷிஃபோன் மக்டொனா, இந்த விதாதம் நடைபெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அவர் வலியுறுத்தினர். அங்கே குறுக்கிட்ட மற்றுமொரு எம்.பி, இலங்கை அரசு விசாரணைகளை துரிதப் படுத்தாவிட்டால், காமன் வெலத் மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்கவேண்டும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். 2013ம் ஆண்டு இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் கனேடிய அரசு, இதனை புறக்கணிக்க இருப்பது போன்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந் நிலையில், பிரித்தானிய அரசும் இதனைப் புறக்கணிக்குமா என்ற கேள்விகள் தற்போது மேலோங்கியுள்ளது. இன்று நடைபெற்ற விவாதம் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதில் கலந்துகொண்ட அமைச்சர்களும் எம்.பீக்கள் பலரும் இலங்கை அரசை கண்டித்ததோடு, சர்வதேச சுயாதீன விசாரணைகள் தேவை என்பதனையும் வலியுறுத்தினர். இலங்கை அரசுக்கு இது பெரும் தலையிடி தரும் சம்பவமாக அமைந்துள்ளது. தனது நாட்டில் காமன்வெலத் மாநாடு நடத்தவேண்டும் எனக்கூறிய இலங்கை, பெரும் பொருட்செலவில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந் நிலையில் முக்கியமான நாடுகள் இதனைப் புறக்கணிக்குமா என்ற பெரும் பதற்றத்தில் இலங்கை உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. ( 2 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தின் காணொளி இணைப்பு )




Geen opmerkingen:

Een reactie posten