89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட சிறீலங்கா அரசு முடிவு எடுத்துள்ளது!
==========================
இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் சிறீலங்கா அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட சிறீலங்கா அரசு முடிவு எடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் ! என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten