பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அளிக்கும் விளக்கம் தமக்கு திருப்தியளிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்க செயலக ஊடகப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றப்பிரேரணை விடயத்தால் இலங்கைக்கான வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் பாதிக்கப்படும் என ஏற்கனவே 14ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நூலன்ட் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் 2012ல் அமெரிக்கா இலங்கைக்கு 27 மில்லியன் டொலர்களை உதவியளித்ததாகவும் அதில் 13.3 மில்லியன் டொலர் அமைதி, பாதுகாப்பு, மனித உரிமை பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டதாகவும் விக்டோரியா நூலன்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2013ம் ஆண்டு 16.5 மில்லியன் டொலர்கள் இலங்கையால் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten