அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் இலங்கை வருவதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. போலி மாயையை சர்வதேசத்துக்கு காண்பிக்கவும் இலங்கை விரும்பவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உள்நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் அனைத்து துறைகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜெனிவா உட்பட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளின் அடிப்டையில் இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சர்வதேச அமைப்புகள் வந்து ஆராயலாம். அதற்கு தடை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றது. எனவே இலங்கையை தவறாக நோக்க்கூடாது.
எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வருகின்றனர். இவர்களின் நிகழ்ச்சி நிரலில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விடயமே முக்கியமானதாக அமைகின்றது.
எவ்வாறாயினும் இலங்கைக்கு யார் வந்தாலும் உண்மைநிலையை பார்த்துவிட்டுப் போகலாம். ஆனால் உண்மைக்கு முரணான தகவல்களின் அடிப்படையில் செயற்பட முற்படக்கூடாது.
இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் மக்களின் விருப்பங்கள் என்பவற்றுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
http://news.lankasri.com/show-RUmryBRXNWip0.html
Geen opmerkingen:
Een reactie posten