தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 januari 2013

சுடுவதற்கு பதிலாக மானத்தை கெடுத்தால் நல்லது: கோட்டபாய முடிவு ?



எம்.பி ஒருவரைச் சுட்டுக்கொன்றால், அது பெரிய பிரச்சனையாகிவிடும். பல நாடுகள் கேள்வி கேட்க்கும். அதுவும் மார்ச் மாதம் ஜெனீவா அமர்வுகள் வர இருக்கும்வேளையில் இவ்வாறு செய்யமுடியாது என்று, முடிவுகட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு வேறு வழிகளில் தற்போது இறங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரன் அவர்களை, செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதுமட்டுமல்லாது தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழக மாணவர்களை விடுகிக்க, நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என்றும் கூறிவந்தவர் இவரே. அவ்வாறு அவர் நீதிமன்றம் சென்று மாணவர்களை வெளியே எடுத்தால், அம் மாணவர்கள் 2013ம் ஆண்டும் நவம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் மாவீரர் தினத்தை யாழில் கொண்டாடுவார்கள். பயம் என்பது இல்லாது போகும் என்று அரச தரப்பு மந்திர ஆலோசனை நடத்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் எம்.பி ஸ்ரீதரனுக்கு ஆலோசனை வழங்கிவரும் அவரது பிரத்தியேகச் செயலாளர் பொன்காந்தனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளார்கள். அடிக்கடி ஸ்ரீதரன் அவர்களின் அலுவலகம் சென்று அங்கே நடைபெறும் விடையங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினர், ஆராய்ந்து வருவதோடு அங்கே உள்ள பொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர். இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டே நடந்தேறி வருகிறது. அதுமட்டுமல்லாது, எம்.பி ஸ்ரீதரன் அவர்களின் மானத்தை வாங்கவும், அவரை சமூகத்தின் மத்தியில் தரக்குறைவான ஒரு ஆளாகவும் காட்ட இலங்கை அரசு முயற்ச்சி செய்துவருகிறது. அதுமட்டுமல்லாது இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வாயே திறக்கவில்லை. இது தான் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4420

Geen opmerkingen:

Een reactie posten