கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான், அமெரிக்காவில் உள்ள சிறுவர் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் நுளைந்த இளைஞன் ஒருவன் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டான். இதில் 3 ஆசிரியர்கள் உட்பட 18 சிறுவர்கள் துடிதுடித்து இறந்துபோனார்கள். ஓபாமா கண்ணீர் சிந்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் என்ற செய்தியை அதிர்வு இணையம் பிரசுரித்திருந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் நேற்றைய தினம் இவர்கள் திருந்தவே மாட்டார்களா என்று கேட்க்கும் அளவுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்று, கோலாகலமாக முடிவுற்றுள்ளது. அது என்ன என்று தெரியுமா, ஆயுதக் கண்காட்சி ஒன்றுதான் !
அமெரிக்கர்களை சுண்டி இழுக்கும் வகையில் இந்த ஆயுதக் கண்காட்சி நடைபெற்றுள்ளது என்பது தான் வெட்கக்கேடான விடையம் ஆகும். சாதாரண பொதுமக்களை ஆயுதம் வாங்கத் தூண்டும் வகையில் இக் கண்காட்ச்சி நடைபெற்றுள்ளது என்றால் பாருங்களேன். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அங்கே இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, ஏன் ராக்கெட் லாஞ்சர் கூட சந்தையில் வாங்கலாம். ஆக நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும் அவ்வளவுதான். இதன் காரணமாகவே அங்கே ஆயுதக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. தற்போது தான் சில இறுக்கமான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் எவரும் இலகுவாக ஆயுதங்களை வாங்கக் கூடிய சூழல் தற்போதும் உள்ளது.
இக் கண்காட்ச்சியில் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கிகள் என்று பல ரகமான துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததாம். இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இவர்கள் எல்லாரும் திருந்தவாபோகிறார்கள் ? என்று சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. அவர்கள் சொல்வதில் என்ன பிழை உள்ளது ?
Geen opmerkingen:
Een reactie posten