ஒரு வெற்றிகரமான 2013ஆம் ஆண்டுப் பொதுநலவாய அரசத் தலைவர்களின் கூட்டத்தைக் காண கனடா விழைகிறது. ஆனால் அந்நிகழ்வினை நடத்துவோர் என்ற முறையில் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களையும் கொள்கைகளையும் சிறீ லங்கா கடைப்பிடிக்கின்றதா என்பது நெருக்கமாக ஊன்றிக் கவனிக்கப்படுகிறது என்று அமைச்சர் கென்னி கூறினார்.
கூட்டத்தில் கனடாவின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையளவு, அரசியல் நல்லிணக்கப்பாட்டிலும் பொறுப்புக்கூறலிலும், உள்நாட்டுப் போரில், நாட்டு மக்கள், அரச மற்றும் எதிர்த் தரப்பாரால் உற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த உசாவல்கள் என்பன, உண்மையான முன்னேற்றம் அடைவதனைப் பொறுத்திருக்கிறது எனவும் அமைச்சர் கென்னி கூறினார்.
இலங்கையில் நின்றபொழுது, அமைச்சர் கென்னி சிறீ லங்கா அரசின் வல்லமையான முக்கிய பேச்சாளர்களையும், பெரிய எதிர்க் கட்சிகளையும், சிறீ லங்காவின் போருக்குப் பின்னான நல்லிணக்கப் பணிகளில், முன்னெற்றம் இல்லாமை ஏமாற்றம் அளிப்பதுபற்றியும், கனடாவினது கவலையைத் தெரிவிப்பதற்காகச் சந்தித்தார்.
சிறீ லங்காவிலுள்ள மனித உரிமைகள் நிலைமைபற்றியும், 2009ல் உள்நாட்டுப் போரில் படையினரால் மருத்துவ நிலையங்கள்மீது குண்டு வீசியமை, மற்றும் பொதுமக்கள்மீது ‘செல்’மழை பொழிந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்யத் தவறியமை குறித்தும், கனடா தொடர்ந்து அக்கறை காட்டும்.
சிறீ லங்காவிலுள்ள மனித உரிமைகள் நிலைமைபற்றியும், 2009ல் உள்நாட்டுப் போரில் படையினரால் மருத்துவ நிலையங்கள்மீது குண்டு வீசியமை, மற்றும் பொதுமக்கள்மீது ‘செல்’மழை பொழிந்தமை போன்ற குற்றச்சாட்டுகளை விசாரணைசெய்யத் தவறியமை குறித்தும், கனடா தொடர்ந்து அக்கறை காட்டும்.
அமைச்சர் கெனி, சிறிலங்காவின் தலைமை நீதிபதி சிரானி பண்டாரநாயகாவுக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசியல் குற்றச்சாட்டுபற்றி கவலை தெரிவித்தார். அத்தகைய குற்றச்சாட்டு, வழக்கத்தில் உள்ள நடைமுறைகளையோ அல்லது அரசியல் குற்றச்சாட்டுக்குரிய மரபுவழி அடிப்படைகளையோ பின்பற்றுவதாக இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
நடைமுறைகள், மரபுவழி அடிப்படைகள், பொதுநல நாடுகளின் சுதந்திரமான நீதித்துறை மற்றும் உரிமைகள்பற்றிய பாதுகாப்பு போன்றவற்றை உறுதிசெய்யம் அளவுகோல்கள் ஆகும். ஊடகவியலாளர்கள் மற்றும் அரசுசார்பற்ற அமைப்புக்கள் தொந்தரவுக்கு உள்ளாவதுபற்றியும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது சிறீ லங்காவில் மக்களாட்சிக்குரிய இடைவெளி சுருங்கிவரும் குழப்பமான அறிகுறிகளைச் சுட்டிக் காட்டுகிறது என்றார்.
கனடா, தோழமை பொதுநல உறுப்பு நாடுகள் உட்பட உலகம் முழுதும், தொடர்ந்து சுதந்திரம் மற்றும் அரசியல் பொறுப்புக்கூறலுக்கு குரல்கொடுக்கும் என அமைச்சர் கெனி கூறினார். மேலும், அடிப்படை மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் சட்டத்தின் மாட்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் உட்பட, பொதுநல நாடுகளது அடிப்படை விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு, சிறீ லங்கா தனது பற்றுறுதியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டுமென வற்பறுத்துவதாக அமைச்சர் கூறினார்.
http://www.canadamirror.com/canada/4579.html
புலிகளுக்கு பிராணவாயு கொடுக்கிறது கனடா
நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
சிறிலங்கா அரசு மீது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி நேற்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,
“நந்திக்கடல் கரையோரத்தில் 2009 மே மாதம் தமது போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புதுவாழ்வு கொடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், தனிஈழத் திட்டத்தின் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு பிராணவாயுவை வழங்கியுள்ளது.
உறுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நல்லிணக்க முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையிலேயே வெளியகத் தலையீடுகள் அமைந்துள்ளன.
இராணுவ பலம் இல்லாவிட்டாலும் அனைத்துலக அமைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten