யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகை விநியோக பணியாளர் ஒருவர் இன்று இனந்தெரியாத நபர்களினால் கடுமையான தாக்கப்பட்டுள்ளதுடன், பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
யாழ் வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் குறித்த விநியோக பணியாளர் அடுத்து வீழ்த்தப்பட்டு பொல்லுகளால் சராமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்ததால், கைகளில் பலமாக அடிபட்டு கை முறிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவரை அருகில் உள்ள கால்வாய்க்குள்ளும் தூக்கிவீசிய தாக்குதல் நபர்கள் மோட்டார் சைக்கிளுடன் உதயன் பத்திர்கைகளை எரித்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதே போன்று மற்றுமொரு விநியோக பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளார் எனவும், எனினும் அவர் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊடக சுதந்திரம் புறக்கணிக்கப்படும், மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் வரிசையில் இலங்கை தொடர்ந்து முன்னணியிலிருந்து வரும் நிலையில், யாழில் குறிப்பாக முன்னணி தமிழ் பத்திரிகை ஊடகத்தை குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten