தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 januari 2013

சிராணி பண்டாரநாயக்க இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் !!


இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.
இந்த அங்கீகார ஆவணத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டார்.
இதனையடுத்து அது தொடர்பான அறிவித்தல் சிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதம நீதியரசரான தம்மை பதவி விலக்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு சிராணி பண்டாரநாயக்கவுக்கு கிடைத்துள்ளதாக அவரின் சட்ட ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2ம் இணைப்பு
சிராணியைப் பதவி நீக்கினார் ஜனாதிபதி
இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்து நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
சிராணிக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்திருந்த கண்டன பதவிநீக்கத் தீர்மானத்தை ஆதரித்து நாடாளுமன்றம் வாக்களித்து ஓரிரு நாட்களில் ஜனாதிபதியின் இந்த உத்தரவு வருகிறது.
சிராணியை பொறுப்பிலிருந்து அகற்றும் உத்தரவில் ஞாயிறு காலை ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்தது.
இந்த உத்தரவு கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிடம் கிடைத்து விட்டதாக அவருக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவு குறித்து உடனடியாக கருத்து வெளியிடுவதற்கு சிராணி மறுத்துவிட்டார்.
கண்டன பதவி நீக்க நடைமுறையில் முறைகேடுகள் இருக்கின்றன என்றும், இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் நாட்டின் உச்சநீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதம நீதியரசர் பொறுப்பிலிருந்து அகல சிராணி மறுக்கவும் வாய்ப்புள்ளது.
3ம் இணைப்பு
பதவி நீடிப்பா? நிராகரிக்கிறார் சட்டத்தரணி
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை தமது பதவியை நீடிக்குமாறு, தமது சட்டத்தரணி ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக வெளியான தகவலை, அவரது சட்டத்தரணி நிராகரித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் தாம் சுயாதீனமாக பதவி விலகுவதாக அறிவித்து, இந்தக் கடிதத்தை அனுப்பி இருப்பதாக, ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் பிரதம நீதியரசரின் சட்டத்தரணி நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்டத்தரணிகள் ஒன்றியம், இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.

President approves removal of Chief Justice
[ Sunday, 13 January 2013, 07:02.39 AM GMT +05:30 ]
Presidential Coordinating Secretary Wijeyananda Herath states that the president has signed the removal letter of Chief Justice Dr. Shirani Bandaranaike.
Meanwhile, Presidential Spokesperson Mohan Samaranaike said that the official announcement of the removal of chief justice was delivered to her residence on Sunday morning.
He added that the decision was made following the parliament's vote on the impeachment motion.

http://eng.lankasri.com/view.php?224ZBmAm0acaceWAA4d4e2YOY5n0202cdlOUOedded4Oldlc2035n5YOe2e4dAAMCeaca0aKmBZB42

Geen opmerkingen:

Een reactie posten