ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றைக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமையால் நிலைமை மோசமடைந்து இலங்கையின் இறையாண்மை மற்றும் எதிர்காலம் என்பன கேள்விக்குறியாகியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பிரதிநிதிகள் உள்நாட்டிற்குள் வந்து இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அறிக்கைகளை வெளியிடுகின்றனா.
இது இராஜதந்திர ரீதியில் அநாகரிகமானதென்றாலும் அரசின் பொறுப்புடைமை இவ்விடயத்தில் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிச்சயம் சர்வதேச பொறிமுறையொன்று முன்வைக்கப்படும்.
அரசாங்கம் ஜெனிவா சவாலை எதிர்கொள்ள உரியவகையில் செயற்படுவதாக தெரியவில்லை.
இலங்கை வந்துள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் நாட்டிற்கு எதிராக கடுமையான அறிவிப்புகளை மேற்கொள்ளும் போதும் அரசு பொறுமையுடனேயே உள்ளது.
எனவே நாட்டின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி விட்டுள்ளது என்று கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten