அல் கய்தா, ஜிஹாத் மற்றும் தலிபான் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சட்டத் திருத்தங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் வடக்கு கிழக்கில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனையும், பத்து லட்ச ரூபா அபராதமும் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு எதிரான தண்டனைகள் குறித்து தற்போதைய சட்டங்களில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜிஹாத், அல் கய்தா மற்றும் தலிபான் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை முடக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmryBRUNWjoy.html
Geen opmerkingen:
Een reactie posten