தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 januari 2013

மாணவிகள் போடும் குட்டைப் பாவடை !


மேற்குலக நாடுகள் போல, தற்போது இந்தியாவிலும் மாணவிகள் குட்டைப் பாவாடை அணிய ஆரம்பித்துள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. பருவ வயது மாணவிகள் இவ்வாறு குட்டை பாவாடை அணிவது ஆண்களை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், அது ஆபாசத்தை தூண்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது இவ்வாறிருக்க, ஜெய்ப்பூர்ரில் மாணவிகளின் சீருடையில் குட்டை பாவாடைக்கு தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மாணவி பலாத்கார சம்பவத்தையடுத்து, பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் அல்வார் தொகுதி எம்.எல்.ஏ பன்வாரி லால் சிங்கால், தலைமை செயலர் மேத்யூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெரும்பாலான பள்ளி மாணவிகளுக்கு குட்டை பாவாடை சீருடையாக உள்ளது. இதனால் மாணவர்கள் சிலர் தங்கள் செல்போன்களில் மாணவிகளை, அவர்க ளுக்கு தெரியாமல் ஆபாசமாக படம் எடுக்கின்றனர். இந்தப் படங்களை அவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடலாம். பெண்களின் மானத்தை காப்பாற்ற ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும். அல்வார் பகுதியில் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இது போன்ற குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவிகளின் சீருடையில் பாவாடைக்கு பதில், முழுக்கால் சட்டை அல்லது சல்வர் கமீஸ் ஆடையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களின் ஆபாச பார்வையிலிருந்து மாணவிகள் தப்பிக்கலாம். முழுக்கால் சட்டை மாணவிகளுக்கு சவுகரியமாக வும், கோடை மற்றும் குளிர்காலங்களில் இதமான ஆடையாகவும் இருக்கும். இது தலிபான்கள் மாதிரியான சிந்தனையோ, அல்லது பெண்களின் சுதந்திரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்ல. மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கருத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு பன்வாரி லால் சிங்கால் கூறியுள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten