இல்லை புலிகள் மட்டும் அப்படி செய்யலாம் என்ற சட்டம் இவர்களால் செய்யப்பட்டதா??
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியினர்
ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நான்கு வயது குழந்தை மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலையினைக் கண்டித்து இராணுவத்திற்கு எதிராக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் பொழுது “புலிக் கொடியை ஏற்றிய சந்தேகநபர்களை விரைவாக கைது செய்த இராணுவம் ஏன் கொலையாளிகளை இன்னும் கைது செய்யவில்லை” எனவும் ஈ.பி.டி.பியினர் கோசம் எழுப்பினர்.
கடந்த மாதம் 27ம் திகதி சுதாரனி குணசேகரம் எனும் நான்கு வயது சிறுமி, மண்டைதீவிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து காணாமல் போயிருந்தார். இவரது சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து மறுநாள் மீட்கப்பட்டது. மரண விசாரணைகளின் பொழுது குழந்தை பாலியல் வன்புணர்விற்குட்பட்டமை நிரூபிக்கப்பட்டது.
இதேபாணியிலான மரணம் கடந்த காலத்தில் நெடுந்தீவிலும் பதிவாகியது.
யாழ் தீவகப் பகுதிகளில் அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துகின்ற ஈ.பி.டி.பியினர் இலங்கை இராணுவத்திற்கெதிராக “ரோஜாவன சிறுவர் கழகம்” எனும் பெயரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச அதிகாரிகள், 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
மேலும் அமைச்சர் தேவானந்தா, தனிப்பட்ட முறையில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள கூறியதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்தன.
புனித. பேதுரு ஆலய முன்றலில் ஆரம்பித்த இவ்வார்ப்பாட்ட பேரணி மண்டைதீவு பொலிஸ் நிலையம் முன்பாக நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தின் பொழுது இலங்கை இராணுவத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இவ்வாறன ஓர் நிலையில் பொலிஸார் 31 வயதான ஈ.பி.டி.பி ஆதரவாளரையே இக்கொலையின் பிரதான சந்தேக நபராக கைது செய்தனர். ஆயினும் இக் கைது தொடர்பில் ஊடகத் துறையினர் பொலிஸாரிடம் வினவிய பொழுது அவர்கள் முற்றாக மறுத்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திர முன்னணி கட்சியுடன் நெருங்கிய உறவினைப் பேணுகின்ற ஈ.பி.டி.பியினர் அண்மைக் காலமாக இலங்கை இராணுவத்தினரால் ஓரங்க்கட்டப்படும் நிலை காணப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten