அமரிக்காவில் இருந்து விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் செயற்பட்டுக் கொண்டிருப்பது பிரச்சினையான விடயம் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு அமரிக்கா தூதுவராக பெற்றிசீயா பியுட்டினியஸ் பதவியேற்ற பின்னர் அவருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின்போது மஹிந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை தெரிவித்தாக அமரிக்க தூதரகம் வாசிங்டனுக்கு அறிவித்திருந்தது.
இந்த தகவல் விக்கிலீக்ஸில் இருந்து கசிந்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேசத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு செயற்பட்டு வருகிறது.
நிதிச் சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அது ஒரு பிரச்சியாக இருக்கவில்லை.
எனினும் விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் ருத்ரகுமாரன் மற்றும் தமிழ் புலம்பெயர்வாளர்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக இன்னும் பயங்கரவாதம் தோற்கடிக்கபடவில்லை என்றே கருதுவதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் வந்தபோதும் அவற்றில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
இதன்போது கருத்துரைத்த அமெரிக்க முன்னாள் தூதர் புட்டினஸ், இடம்பெயர்ந்தோர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது இலங்கை- அமெரிக்க உறவை பாதிக்கும் என்று குறிப்பிட்டதாக வி;க்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten