இப்போதாவது தமிழா விழிப்பாயா?ஆயர்களுக்கும் தமிழர் பிரச்சனைக்கும் தொடர்பு இருப்பதால் தானே அமரிக்கர் அவர்களுடன் ஆலோசனை நடாத்துகிறார்கள்!!அவர்கள் மூலம் தமிழ் ஈழம் கொடுத்து ஆண்டவர் கிருபையை பார்த்தீர்களா ,அவனின் வட்டத்துக்குள் வாருங்கள் என்று அனைத்து தமிழரையும் கிறித்தவர் ஆக்க இம்முயற்சியோ!! வளர்க்க என்னவெல்லாம் செய்றாங்க?முஸ்லீம் நாடுகளை தாக்குறாங்க,தீவிரவாதிகளை உருவாக்கி ஆயுதம் கொடுத்து பயங்கரவாதிகளாக்கி அவர்களை அழிக்கவென்று நாடுகளை பிடிக்கிறாங்க,காப்பார்ருவதுபோல நடித்து மதத்தை புகுத்துறாங்க,சிறப்புத்தான் போங்க!!
யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதென பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தாலும், ஏராளமான மக்கள் காணாமல் போன தங்கள் உறவுகளை இன்னமும் தேடிக்கொண்டிருக்கும் உண்மை அமெரிக்காவுக்குத் தெரியும் என அமெரிக்க துணை இராஜங்க செயலாளர் ஜேம்ஸ் மூர் யாழில் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். ஆயர் இல்லத்தில் ஆயரை சந்தித்த மேற்படிக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகள், இராணுவ நெருக்கு வாரங்கள், மீள்குடியேற்ற நிலமைகள், மக்களுடைய நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது யுத்தம் நிறைவடைந்து பல அபிவிருத்திகள் இங்கு மேற்கொள்ளப்பட்டாலும், தமிழர்கள் விரும்பும் வகையில், சுதந்திரமான நடமாட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் இராணுவக் குறைப்பு இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழர்கள் சுதந்திரமற்ற ஒரு இனமாகவே வாழ்கின்றனர் என ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமெரிக்க துணை இராஜங்கச் செயலாளர் தலைமையிலான குழுவினர் தாம் இதுகுறித்து அறிந்திருப்பதாகவும், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்த நிலைமை தற்போது இல்லாமையினை நாம் நேரடியாகவே அவதானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் காணாமல் போனவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியாது, எனக் கூறியிருந்தாலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் மக்கள் சுட்டிக்காட்டியிருப்பதுடன் எமக்கும் அந்த விடயத்தை மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர் என குறிப்பிட்டனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவனத்தை தொடர்ந்தும் செலுத்தி வருவதாக கூறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நேற்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் தாம் நிறைய விடயங்கள அறிந்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten