தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 januari 2013

சிரானி பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராக கனடா முறைப்பாடு


முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராக கனடா முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.
குற்றவியல் பிரேரணை ஒன்றின் மூலம் சிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டார். பொதுநலவாய நாடுகள் அமைச்சு செயற்குழுவில் கனடா இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைச்சு செயற்குழுவில் கனடா, அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், ஜமெய்க்கா, சியரே லியோன், ட்ரினிடாட் என்ட் டுபாகோ, மாலைதீவு போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
கனடாவின் இந்த முறைப்பாடு அமைச்சு செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை ரத்து செய்யக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
தற்போதைய நிலைமைகள் குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மாவின் இலங்கை விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten