தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 januari 2013

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை அவசியம்: அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை


இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என்றுக்குற்றம் சுமத்தியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமரிக்க ஜனாதிபதி பெரெக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளியுறவுக்கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி (Bob Casey) ஆகியோரே இந்த கோரிக்கையை நேற்று விடுத்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படு;த்த தவறியுள்ளது.
இதன்காரணமாக இலங்கை மக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று குறித்த செனட்டர்கள் இருவரும் கூறியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துகிறது.
எனவே, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்தவேண்டும் என்று அமரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten