தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 januari 2013

இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் பொறிமுறையை வலியுறுத்தி நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்!



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, எதிர்வரும் பெப்ரவரி- மார்ச் மாத மனித உரிமைகள் சபை அமர்வின்போது, இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
இதில் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் வகையிலான ஐக்கிய நாடுகளின் பொறிமுறை ஒன்று குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று நவநீதம்பிள்ளையின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் குற்றவியல் பிரேரணையின் மூலம் முன்னாள் பிரதம நீதியரசர் நீக்கப்பட்டமை குறித்து நவநீதம்பிள்ளை தமது தீவிர கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் அவரது அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரர் சிராணி பண்டாரநாயக்க மீது மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் பிரேரணையின்போது இலங்கையின் நீதிமுறைகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படவில்லை. அத்துடன் இலங்கையின் சட்டத்துக்கு இந்த குற்றவியல் பிரேரணை, ஒரு பின்னடைவு என்றும் நவநீதம்பிள்ளையின் அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் ஒருக்கட்டமே முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையாகும்.
இதேவேளை புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களை மறுத்து அதற்காக கடந்த மனித உரிமை சபை அமர்வுகளில் கருத்துக்களை முன்வைத்தவராவார்.
எனவே அவர் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறையில் பாரிய துஸ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நவநீதம்பிள்ளையின் அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.

http://news.lankasri.com/show-RUmryBScNWkr6.html

Geen opmerkingen:

Een reactie posten